150 பேருக்கு கொரோனா பரிசோதனை

தேவையின்றி சுற்றி திரிந்த 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-06-05 20:39 GMT
ராஜபாளையம், 
தேவையின்றி சுற்றி திரிந்த 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
முழு ஊரடங்கு 
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 
முக்கியமான சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைத்துள்ளனர். அதேபோல சுகாதார துறை மூலம் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதையும் மீறி பலர் வாகனங்களில் சாலையில் தேவையின்றி சுற்றி வருகின்றனர். 
கண்காணிப்பு பணி 
இந்தநிலையில் ராஜபாளையம் பகுதியில் தெற்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது தேவையின்றி சுற்றி திரிந்த 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
ஏற்கனவே கடந்த 1-ந் தேதி 180 நபர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராஜபாளையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்