புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராய ஊறல் வைத்திருந்த வாலிபர் கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராய ஊறல் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-05 20:38 GMT
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராய ஊறல் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
ரகசிய தகவல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புரத்தினம், சப்- இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் குரும்பபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். 
கைது
அப்போது அங்குள்ள முட்புதர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 50 லிட்டர் சாராய ஊறல் இருந்ததையும் கண்டுபிடித்தனர். உடனே அங்கிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 30) என்பதும், அவர்தான் சாராய ஊறல் வைத்திருந்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கருப்புசாமியை போலீசார் கைது செய்ததுடன், 50 லிட்டர் சாராய ஊறலையும் கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் செய்திகள்