மதுக்கடையில் திருட முயன்றவர் கைது
மதுக்கடையில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி ஜவுளிபூங்கா பின்புறம் ஆண்டிபட்டி, கச்சைகட்டி சாலையில் அரசு மதுபானக்கடை உள்ளது. இங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 21 மது பாட்டில் பெட்டிகளை திருடி எடுத்து கடையின் வெளியில் வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்று வாடிப்பட்டிபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவராம சந்திரன், ஏட்டுகள் சுப்பையா, பாண்டியராஜன் ஆகியோர் வருவதை கண்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ல்வியா ஜாஸ்மின் வழக்குபதிவுசெய்து தப்பிஓடிய மர்மமனிதர்களை வலைவீசிதேடி வந்தார். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இதேபோல் மதுக்கடையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வாடிப்பட்டி மதுக்கடை திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் அதற்கு உதவிய சோழவந்தான் சேர்ந்த அங்கணன் (வயது36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.