பெரம்பலூர் மாவட்ட மழை அளவு விவரம்
பெரம்பலூர் மாவட்ட மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகரில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெப்பநிலையும், மாலை நேரத்தில் இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவ காற்றின் தாக்கம் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரம்பலூர்- 55, பாடாலூர்- 40, செட்டிகுளம்- 50, புதுவேட்டக்குடி- 36, எறையூர் -13, வி.களத்தூர்- 5, கிருஷ்ணாபுரம்- 11, தழுதாழை - 19, வேப்பந்தட்டை- 8, அகரம் சிகூர்- 2.
பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.