மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் இணையவழி ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முகமது மைதீன் முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் சம்சுல்லூகா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் துணை தலைவர் அப்துல் கரீம், நிர்வாகிகள் சுலைமான், செய்யது அலி, நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.