கிருஷ்ணராயபுரம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

கிருஷ்ணராயபுரம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-05 19:09 GMT
கிருஷ்ணராயபுரம்
3 பேர் கைது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழையபாளையம் பகுதியில் மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சிய வளையப்பாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 21), சண்முகம் (21), மலையாளன் (45) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
குளித்தலை
குளித்தலை பிள்ளை தோப்பு தெருவை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (45). இவரது வீட்டில் சாராயம் தயாரிப்பதற்காக ஊறல் போடப்பட்டுள்ளதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. 
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் ஊறல் போட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
இதையடுத்து அங்கேயே அந்த ஊறல் போடப்பட்டிருந்த பொருளை போலீசார் ‌கீழே கொட்டி அழித்தனர். சாராயம் காய்சுவதற்காக ஊறல் போட்டது தொடர்பாக காஜாமொய்தீன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அசாருதீன் (23) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். 
லாலாபேட்டை 
லாலாபேட்டை அருகே வேங்கன்பட்டியில் மது விற்று கொண்டிருந்த வீரபட்டியை சேர்ந்த மணிகண்டன் (19) என்பவரை லாலாபேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்