முசிறி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

முசிறி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியானார்

Update: 2021-06-05 18:46 GMT
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பெரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் காய்ச்சல் காரணமாக சமீபத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். பின்னர் அவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிசிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இதையடுத்து அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்