சூளகிரி அருகே பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
சூளகிரி அருகே பயிர்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருகிறது.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பெரியகுத்தி கிராமத்தில் நேற்று யானை ஒன்று புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது. மேலும், அங்கு 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், தக்காளி செடிகளை கால்களால் மிதித்து நாசமாக்கியது. பின்னர் வனப்பகுதிக்குள் ஒற்றை யானை சென்று பதுங்கிக்கொண்டது. ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.