தேன்கனிக்கோட்டை, பர்கூரில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
தேன்கனிக்கோட்டை, பர்கூரில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் சலாம்பேக் தலைமை தாங்கினார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்கம் சார்பில் உச்சனப்பள்ளி, நொகனூர், சாப்ரானப்பள்ளி, சந்தனப்பள்ளி, முனுவணப்பள்ளி, குருபரப்பள்ளி, ஐம்புரம்தொட்டி ஆகிய கிராமங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதில் அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அஞ்செட்டியில் விவசாய சங்கங்கள் மற்றும் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
பர்கூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு மாநில குழு உறுப்பினர் கண்ணு தலைமை தாங்கினார். இதையடுத்து பர்கூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.