மாவட்டத்தில் பரவலாக மழை: தளியில் 40 மி.மீட்டர் பதிவானது

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தளியில் 40 மி.மீட்டர் மழை பதிவானது.;

Update: 2021-06-05 17:32 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் அக்னி நட்சத்திரத்தையொட்டி வெயில் அதிகமாக காணப்பட்டது. இந்த மாத தொடக்கம் முதல் வெயில் சற்று குறைந்து காணப்பட்டதுடன், மழையும் அவ்வப்போது பெய்தது. இதனிடையே நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தளியில் 40 மி.மீட்டர் மழை பதிவானது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தேன்கனிக்கோட்டை-29, ஓசூர்-18, ராயக்கோட்டை-6, சூளகிரி-2. நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்தது.

மேலும் செய்திகள்