அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன
மன்னார்குடியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நெற்பயிர்கள் சாய்ந்தன
மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அடிக்கடி மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்தநிலையில் மன்னார்குடி சுற்று வட்டார பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை காற்றுடன் 1 மணிநேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை சாகுபடி நெல் வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்தன.
விவசாயிகள் கவலை
இதையடுத்து மழையால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெய்யும் மழையால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிப்பது மட்டும் இல்லாமல் மகசூலையும் பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.