ரத்தினகிரி அருகே காரில் மணல் கடத்திய 2 பேர் கைது

ரத்தினகிரி அருகே காரில் மணல் கடத்திய 2 பேர் கைது

Update: 2021-06-05 15:57 GMT
ஆற்காடு
-
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலாற்றுப் பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தப்படுவதாக ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை போலீசார் ரத்தினகிரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கீழ்மின்னல் சுடுகாடு பகுதியில் உள்ள பாலாறு அருகில் பதிவெண் இல்லாமல் வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனைச் செய்தனர். அதில் மணல் மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. 

மணல் கடத்தலில் ஈடுபட்டு காரில் வந்த ரத்தினகிரியை அடுத்த மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் (வயது 21), கீழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணலுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்