செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது

செய்யூர் அருகே குழாய் போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-05 12:40 GMT
கத்திக்குத்து
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிழக்கு கடற்கரை சாலை விளம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் விஸ்வநாதனின் மகன்கள் சுப்பிரமணி மற்றும் முருகன் ஆகியோர் இடையே வீட்டின் அருகே குழாய் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.இதில் கோபாலகிருஷ்ணனை முருகன், சுப்ரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

3 பேர் கைது
தகவலறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். முருகன், சுப்பிரமணியன் இருவரும் தப்பிச்சென்று விட்டனர். உடந்தையாக இருந்த கடப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் (21), ராமாபுரத்தை சேர்ந்த தினேஷ் (21), வந்தவாசி தாலுகா கருடபுறம் பகுதியை சேர்ந்த செல்வம் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து செய்யூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற சுப்பிரமணியம், முருகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்