கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

மராட்டியத்தில் மக்களை வாட்டிவதைத்து வரும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது.

Update: 2021-06-05 10:22 GMT
இது ஒருபக்கம் நிம்மதியை அளித்தாலும், கொரோனா 3-வது அலை ஏற்படும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே 3-வது அலையை எதிர்கொள்ள மராட்டிய அரசு தயாராகி வருகிறது. 

இந்தநிலையில் சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியில் ஆக்சிஜன் ஆலையை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்த பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

கொரோனா 3-வது அலையை சமாளிக்க கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும். எனவே கொரோனா 3-வது அலையை திறம்பட கையாள கூடிய வகையில் மாவட்ட நிர்வாகங்கள் திட்டங்களை முன்கூட்டியே வகுக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக்கூடாது. மாவட்டங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு அனைத்து  உதவிகளையும் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்