பேரையூர்,
டி.கல்லுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது நூர்தீன் மற்றும் போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோபாலசாமி மலை அடிவாரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வி. அய்யம்பட்டியை சேர்ந்த சுந்தரபோஸ் (வயது 30), என்.முத்துலிங்காபுரத்தை சேர்ந்த தங்கமலை ( 44) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் 70 மதுபாட்டில்களை கொண்டு வந்தபோது போலீசார் மது பாட்டில்களையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.