கடையம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள்
கடையம் பகுதியில் கொரோனா ஊரடங்கையொட்டி பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கடையம்:
கொரோனா ஊரடங்கையொட்டி கடையம் அருகே லட்சுமியூர், வைகுண்டனூர், கருத்தலிங்கபுரம், புலவனூர், கீழக்கடையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் புளி கணேசன், ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் புங்கம்பட்டி ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.