தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-06-04 20:54 GMT
கரூர்
கரூர் தாந்தோணிமலை முத்தலாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் ஹேமாஸ்ரீ (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். ஹேமாஸ்ரீ, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியில் இருந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்