சிறுமியிடம் ஆபாசம்; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
கடையம் அருகே சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கடையம்:
கடையம் அருகே பாரதி நகர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குட்டிதுரை (வயது 58). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் 10 வயது சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குட்டிதுரையை கைது செய்தார்.