சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு

சங்கரன்கோவிலில் தொற்று நோய் ஏற்படும் வகையில் கூட்டத்தை சேர்த்ததாக தி.மு.க.வினர் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-06-04 20:44 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொற்று நோய் ஏற்படும் வகையில் கூட்டத்தை சேர்த்ததாக தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உள்பட தி.மு.க.வினர் 50 பேர் மீது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்