வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

கடையநல்லூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-04 20:34 GMT
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை அடுத்த சிங்கிலிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் சாராயம் காய்ச்சிய மாரிமுத்து (வயது 48), கனகராஜ் (38), இவருடைய தம்பி மகேந்திரன் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஒரு லிட்டர் சாராயம் மற்றும் 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் செய்திகள்