கொரோனாவுக்கு மேலும் 5 பலி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-06-04 20:34 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,321 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 10,004 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,179 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 61 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று 1,137 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்