போலீசாருக்கு இலவச மூலிகை மருந்து

போலீசாருக்கு இலவச மூலிகை மருந்து வழங்கப்பட்டது.

Update: 2021-06-04 20:17 GMT
மதுரை,
கொரோனா 2-ம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதில் பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள கே.கே.நகர் கேரள ஹெல்த்கேர் ஆயுர்வேதிக் கிளினிக் சார்பில் அண்ணாநகர் போலீசாருக்கு ஆயுஷ்க்வாத் ஆயுர்வேத மூலிகை பொடி, கபசுர குடிநீர் பொடி நேற்று வழங்கப்பட்டது. இதனை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அங்கு பணிபுரியும் போலீசார் அனைவ ருக்கும் வழங்கினார். இது குறித்து கேரள ஹெல்த்கேர் டாக்டர் பிரமோத் கூறும் போது, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தற்போது பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கவும், சிறந்த எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் இந்த பொடி என்று பரிந்துரை செய்துள்ளது. இதனை நன்கு காய்ச்சி காலையில் சாப்பிட்ட பிறகு ஒரு வேளை மட்டும் குடித்தால் போதும் என்றார். இந்த நிகழ்ச்சியில் கிளினிக் நிர்வாக இயக்குனர் மாரீஸ்வரி, மேலாளர் சுப்பிரமணியன், ரபீக் அகமது, பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்