கழுத்தை அறுத்து பெயிண்டர் தற்கொலை

திண்டுக்கல்லில் கழுத்தை அறுத்து பெயிண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-04 20:16 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 32). பெயிண்டர். 

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கொரோனா காலமாக இருப்பதால் அவருக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. மேலும் அம்மை நோய் தாக்கியதால், அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். 

எனவே, அவருடைய தாயார் அருந்ததி கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அருந்ததி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். 

இதனால் ஸ்ரீதர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஸ்ரீதர் திரும்பி வரவில்லை. இதற்கிடையே மேட்டுப்பட்டி-மொட்டணம்பட்டி சாலை அருகேயுள்ள காட்டுப்பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் ஸ்ரீதர் பிணமாக கிடந்தார். 

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஸ்ரீதர் கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் பிளேடால் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


இதையடுத்து ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்