தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
நாகமலை புதுக்கோட்டை, கீழமாத்தூர், அலங்காநல்லூர், மேலச்சின்னம் பட்டி, திருமங்கலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த வண்ணம் இருந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதுரை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது30), நாகேந்திரன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்த தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.