ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் பெண்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் தனி மனித இடைவெளியுடன், முக கவசம் அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிக வட்டி கேட்கும் நிதி நிறுவனங்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாத தவணை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மண்டல துணை வட்டாட்சியர் கலைவாணியிடம் அளித்தனர்.