மதுவிற்ற 3 பேர் கைது
சாத்தூர் பகுதியில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய கொல்லப்பட்டி சாலை பகுதியில் மதுபாட்டில் விற்ற திண்டுக்கல் மாவட்டம் திருகம்பட்டியை சேர்ந்த பாபு சரவணன் (வயது 31) என்பவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெரியார் நகர் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த கருப்பசாமி (72) என்பவரிடம் இருந்து 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். படந்தால் ரோட்டில் தேவர்சிலை பின்புறம் வைத்து மதுபாட்டில் விற்ற ஒ.மேட்டுபட்டியை சேர்ந்த முருக குமார் (26) என்பவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.