அம்பை நதியுண்ணி கால்வாயில் தண்ணீர் திறப்பு

அம்பை நதியுண்ணி கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-06-04 18:48 GMT
அம்பை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்பை பகுதியில் பாசனத்திற்கு பயன்படும் நதியுண்ணி கால்வாயில் கடைமடை வரை நீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாயில் உள்ள அமலைச் செடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பொதுப்பணித் துறையினரால் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் அம்பை அருகே சின்ன சங்கரன்கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள நதியுண்ணி கால்வாயின் தலைமதகில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அம்பை நகர தி.மு.க. செயலாளர் கே.கே.சி.பிரபாகரன், பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்