காய்கறி, மளிகை பொருட்கள் விற்க 44 வாகனங்களுக்கு அனுமதி

காய்கறி, மளிகை பொருட்கள் விற்க 44 வாகனங்களுக்கு அனுமதி.

Update: 2021-06-04 18:29 GMT
கோத்தகிரி,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளது. 

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி தோட்டக்கலை துறை மூலம் 110 வாகனங்களுக்கு காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் மளிகை பொருட்களை விற்பனை செய்ய 7 வாகனங்களுக்கும், காய்கறிகளை விற்பனை செய்ய 37 வாகனங்களுக்கும் அனுமதி சீட்டை செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் வழங்கினர். 

மேலும் அவர்கள் கூறுகையில், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய செல்லும் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்களது அனுமதி ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்