தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-04 18:13 GMT
பனைக்குளம்,ஜூன்.
தேவிபட்டினம் காந்திநகரைச் சோ்ந்தவா் காளிமுத்து (வயது 65). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தை இறந்து விட்ட நிலையில் தாய் வள்ளியுடன் (வயது 90) வசித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வள்ளி வயது முதிர்வின் காரணமாக இறந்து போனார்.
தனிமையில் வசித்து வந்த காளிமுத்து தாய் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் காந்திநகர் மரைக்காயர் ஊருணி அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் செய்திகள்