வால்பாறையில் சிறப்பு முகாம் 1200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

வால்பாறையில் சிறப்பு முகாம் 1200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-06-04 18:03 GMT
வால்பாறை

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் 44 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது.

 இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.  முகாமில் மொத்தம் 1,200 பேர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, வால்பாறை பகுதியில் கொரோனா பரவலை தடுக்கவும், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க தாசில்தார் ராஜா, வட்டார தலைமை மருத்துவ அ திகாரி பாபுலட்சுமண் ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள். 

இதுவரை மொத்தம் 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றனர். 

மேலும் செய்திகள்