கொரோனாவுக்கு 8 பெண்கள் உள்பட 17 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 8 பெண்கள் உள்ட 17 பேர் பலியாயினர். புதிதாக 171 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-04 17:55 GMT
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 8 பெண்கள் உள்ட 17 பேர் பலியாயினர். புதிதாக 171 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
171 பேர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 171 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 700 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 406 பேர் வீடு திரும்பினர். இதுவரை 14 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 37 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
பலி
இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 8 பெண்கள் உள்பட 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் போதிலும் பலி எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை 265 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்