தேன்கனிக்கோட்டையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து மின்கம்பம் சேதம்

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து மின்கம்பம் சேதம்

Update: 2021-06-04 17:44 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் நேற்று மாலை மழை பெய்தது. அப்போது அரசு மகளிர் பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடம் இடிந்து மின்சார கம்பம் மீது விழுந்தது. இதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. இதனால் மின்சாரம் பல மணி நேரம் தடைபட்டது. மின்கம்பம் மீது சுற்றுச்சுவர் விழுந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து மின் ஊழியர்கள் மின் கம்பம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்