மதுபான கடையின் சுவற்றில் துளையிட்டு திருட முயற்சி

மதுபானக்கடையில் சுவற்றில் துளை போட்டு திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

Update: 2021-06-04 17:26 GMT
திருமயம், ஜூன்.5-
திருமயத்தை அடுத்த வாரியபட்டி அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. ஊரடங்கு காரணமாக இந்த மதுபானக்கடை பூட்டி கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மதுபானக்கடையில் வெளிச்சம் தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மர்ம ஆசாமிகள் மதுபானக்கடையில் சுவற்றில் துளை போட்டு திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மதுபான கடை அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் திருட்டு நடைபெறாததை உறுதி செய்தனர். போலீசாரின் ரோந்து பணியால் திருட்டு முயற்சி தடுக்கப்பட்டது. இந்த மதுபான கடையில் கடந்த ஊரடங்கின் போது பல லட்ச ரூபாய் மதுபானங்கள் திருட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்