ஓச்சேரி அருகே கர்நாடகா மாநில மது விற்ற 2 பேர் கைது
ஓச்சேரி அருகே கர்நாடகா மாநில மது விற்ற 2 பேர் கைது;
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்ரவர்த்தி மற்றும் போலீசார் நேற்று பெரும்புலிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் களத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது களத்தூர் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அருகே இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 38), கிருஷ்ணமூர்த்தி (26) என்பதும், லாரி மூலம் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.