திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது
திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தல் 2 வாலிபர்கள் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கொணக்கலவாடி கிராமத்துக்கு பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கொணக்கலவாடி கிராமத்துக்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஏராளமான அட்டைப்பெட்டிகள் இருந்தன. அதில் ஒன்றை திறந்து பார்த்தபோது கர்நாடக மாநில மதுபாட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 188 மது பாட்டில்கள் இருந்தன.
விசாரணையில் பெங்களூருவில் இருந்து விற்பனைக்காக மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக டிரைவரான காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் அலெக்ஸ்பாண்டியன்(வயது 20), கலியபெருமாள் மகன் பசுபதி(21) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்களுடன் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.