போலீஸ் ஐ.ஜி. சுதாகர் டி.ஐ.ஜி. முத்துசாமி பொறுப்பேற்பு

போலீஸ் ஐ.ஜி. சுதாகர் டி.ஐ.ஜி. முத்துசாமி பொறுப்பேற்பு

Update: 2021-06-04 17:09 GMT
போலீஸ் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி பொறுப்பேற்பு
கோவை

கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல அலுவல கம் கோவை ரேஸ்கோர்சில் உள்ளது. இங்கு மேற்கு மண்டல ஐ.ஜி. யாக பணியாற்றி வந்த அமல்ராஜ், பதவி உயர்வு பெற்று சென்னை யில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். 

இவருக்கு பதிலாக மதுரை சரகத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சுதாகர் பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப் பட்டார். அவர், நேற்று மதியம் 1 மணியளவில் ரேஸ்கோர்சில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்துக்கு வந்தார். 

அப்போது வாத்தியங்கள் முழங்க போலீசாரின் அணிவகுப்பு மரியா தையை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், அலுவல கத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்த நரேந்திரன் நாயர், சென்னை சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து  திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த முத்துசாமி, கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

மேலும் கோவை மாநகர உளவு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றிய ரமேஷ் கிருஷ்ணன் நாகப்பட்டினம் கடலோர காவல் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றிய முருகவேல், கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவர், நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய உளவு பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதேபோல் கோவை மாநகர மேற்கு சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனராக மணிகண்டன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்