சுகாதார பணியாளர்களுக்கு உணவு
திருச்செந்தூரில் சுகாதார பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர், ஜூன்:
திருச்செந்தூர் நகரப்பஞ்சாயத்து முன்களப் பணியாளர்களான சுகாதார பணியாளர்களுக்கு அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் திருச்செந்தூர் கிளை சார்பாக மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் மாலையில் நகர் பகுதியில் பணியில் உள்ள போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும் டீ மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நகரப்பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், அய்யப்ப சேவா சங்க கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் மீனாட்சி சுந்தரமணிகண்டன், துணை தலைவர் அஜித்குமார், துணை செயலாளர் அருணாமுத்து, சங்க உறுப்பினர்கள் பாலன், தர்மராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.