வேறொருவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் புதுப்பெண், காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை

வேறொருவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் புதுப்பெண், காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை பெலகாவி அருகே சம்பவம்.

Update: 2021-06-04 14:13 GMT
பெலகாவி, 

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா சிந்தோகி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சப்பா கனவி. அதே கிராமத்தில் வசித்து வந்தவர் ஜக்குபாய். இந்த நிலையில் பஞ்சப்பாவும், ஜக்குபாயும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜக்குபாயின் பெற்றோர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜக்குபாயை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய ஜக்குபாய், பஞ்சப்பாவை சந்தித்து பேசினார். பின்னர் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மாந்தோப்புக்கு சென்று 2 பேரும் அங்கு ஒரு மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி அறிந்த சவதத்தி போலீசார் சம்பவ இடத்திற்குசென்று பஞ்சப்பா, ஜக்குபாயின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வேறொருவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் மனம் உடைந்த ஜக்குபாய், தனது காதலன் பஞ்சப்பாவுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சவதத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்