ஆரணி பகுதியில் லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 5 பேர் கைது
ஆரணி பகுதியில் லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 5 பேர் கைது
ஆரணி
ஆரணி முள்ளிப்பட்டு பைபாஸ் ரோடு அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 37) என்பவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அவர் லாரி டியூப்பில் 55 லிட்டர் சாராயம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கைது செய்து, அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
அதேபோன்று ஆரணி தாலுகா நெசல் ஏரி பகுதியில் குலாப்ஜான் (47) என்பவர் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயத்தை லாரி டியூப்பில் கடத்தி வந்தது தெரியவந்தது. சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், குலாப்ஜானை கைது செய்தனர்.
மேலும் கல்பூண்டி ஏரி பகுதியில் லாரி டியூப்பில் வைத்து சாராயம் விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த சேகர் (35) மூர்த்தி (39) முனியப்பன் (50) ஆகிய 3 பேரை ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் -இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.