மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை

மகன் கண்டித்ததால் அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-04 03:39 GMT
உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் மருத்துவம்பாட்டி கிராமத்தை் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அஞ்சலை (வயது 65). உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.

சில நாட்கள் இவர் மாத்திரைகளை சரிவர சாப்பிடாததால் அவரது மகன் குமரவேல் மாத்திரை சாப்பிடும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அஞ்சலை அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அஞ்சலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்