தனியார் தேயிலை தொழிற்சாலை மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனியார் தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டு, தேயிலைத்தூள் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மஞ்சூர் அருகே தாய்சோலை பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வந்து உள்ளனர்.
இதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அறிவுரைப்படி தடுப்பு நடவடிக்கையாக தனியார் தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டு, தேயிலைத்தூள் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.