நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றம்
நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.;
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குன்னூர் நகராட்சி சுகாதார மையத்தில் நேற்று கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி சுகாதார மையத்துக்கு வந்து தடுப்பூசி போட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் 50 பேருக்கு மட்டுமே தடுப்பூசி டோஸ் வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதனால் மீதமுள்ளவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
எனவே இனி வரும் காலங்களில் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.