வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு- கலெக்டர் கார்மேகம் தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-03 23:08 GMT
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மூலம் கடந்த 28-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்கு, அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். இணையதளம் மூலம் புதிப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்