கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-03 22:36 GMT
சூரமங்கலம்:
கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 06232) ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த ரெயிலில் யாராவது மதுபாட்டில்கள் கடத்தி வருகிறார்களா? என ெரயில்வே போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
அப்போது எஸ் 9-வது பெட்டியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த ரஜினிகாந்த் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 220 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் எஸ் 7-வது பெட்டியில் போலீசார் சோதனை நடத்திய போது அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,
இதையடுத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் சேலம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்