மாம்பழத்தில் வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு அபராதம்

சிவகிரி அருகே மாம்பழத்தில் வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-03 22:36 GMT
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிப்பட்டணம் பீட் வனப்பகுதியில் மாம்பழத்தில் வெடி வைத்து காட்டுப்பன்றி வேடடையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனவர்கள் மகேந்திரன், அஜித்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலரகள் உள்ளிட்டோர் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தினர்.

அப்போது பேச்சியம்மன் கோவில் ஆற்றுப்படுகையில், மாம்பழத்தில் வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்ைடயாடியதாக தேவிப்பட்டணம் நேரு வடக்கு தெருவைச் சேர்ந்த லிங்கராஜா (வயது 51) என்பவரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்து, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்