முககவசம் அணியாத 22 பேருக்கு அபராதம்
நெல்லையில் முககவசம் அணியாத 22 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.;
நெல்லை:
நெல்லை பெருமாள்புரம் போலீசார் பெருமாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வந்த 22 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.