கேட்பாரற்று கிடந்த மோட்டார் சைக்கிள்

ரூ.10 ஆயிரத்துடன் கேட்பாரற்று மோட்டார் சைக்கிள் கிடந்தது.

Update: 2021-06-03 21:24 GMT
மதுரை, 
மதுரை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு பெருங்குடி நான்குவழிசாலை பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மண்டேலா நகர் பஸ்நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கேட்பாரற்று கிடப்பதை கண்டார். உடனே அந்த மோட்டார் சைக்கிள் குறித்து அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் அந்த மோட்டார் சைக்கிளுக்கு உரிமைகோர வில்லை. எனவே அவர் அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்து பார்த்த போது அதில் 10 ஆயிரம் ரூபாய் இருந்தது. பின்னர் பணத்துடன், அந்த மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்