கருணாநிதி உருவப்படத்துக்கு சபாநாயகர் அப்பாவு மரியாதை

பணகுடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.

Update: 2021-06-03 21:18 GMT
பணகுடி:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா நெல்லை மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கூடங்குளத்தில் நடந்த விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். அவர், கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அங்கு பணிபுரியும் நர்சுகளுக்கு இனிப்பு, மதிய உணவு வழங்கினார். இதில் ஞானதிரவியம் எம்.பி., ராதாபுரம் ஒன்றிய செயலாளர்கள் பெல்சி, வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் கவுன்சிலர் சுந்தரலிங்கம், தி.மு.க. பிரமுகர்கள் தாமஸ், கண்ணன், ஆனந்த், உட்லின், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பணகுடி பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பிரதிநிதிகள் மாணிக்கம், அசோக் குமார்  உள்பட பலர் கலந்து கொண்டர். தொடர்ந்து 45 சவர தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளையும், ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.  முன்னதாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு திசையன்விளை, வள்ளியூர் பகுதிகளில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட வந்த சபாநாயகர் அப்பாவு செஞ்சிலுவை சங்கத்தினருடன் கலந்துரையாடி பாராட்டினார். செஞ்சிலுவை சங்க செயலாளர் சபேசன், அலெக்ஸ் செல்வன், ராஜன், ராஜீ, ராபின், அய்யப்பன், பவுல், ராஜா உள்ளிட்ட தன்னார்வலர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் வகையில், வள்ளியூரில் திருநங்கைகள் 60 பேருக்கும், நரிக்குறவ காலனியைச் சேர்ந்த 120 குடும்பத்தினருக்கும் அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை சபாநாயகர் அப்பாவு வழங்கினர். நிகழ்ச்சியில் வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் விஜயகுமார், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்