ஆதரவற்றோருக்கு உணவு வினியோகம்
பழனியில் ஊரடங்கு காரணமாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.
பழனி:
கொரோனா ஊரடங்கு காரணமாக, பழனி பகுதியில் உணவின்றி ஆதரவற்றோர் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், பழனி பஸ்நிலைய பகுதியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா முன்னிலையில், ஆதரவற்றோர் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.