கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
அடிப்படை வசதிகளை மேம்படுத்த கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
விருதுநகர்,ஜூன்
விருதுநகர் யூனியன் பாவாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அப்பகுதியின் 12-வது வார்டு யூனியன் கவுன்சிலர் ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அந்த கிராம மக்கள் தங்களது அடிப்படை வசதிகள் குறித்த பிரச்சினை குறித்து யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கு சாலை சீரமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத நிலையில் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.